2026 மே 04, திங்கட்கிழமை

காத்தான்குடி கிராம உத்தியோகத்தர்களுக்கு உள்ளக இடமாற்றம்

Super User   / 2012 ஏப்ரல் 06 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பிரதேச செயலக பரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு பின்னர்  உள்ளக இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் எஸ்.கோமலேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த இடமாற்றங்கள் உடனடி அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பிலான இடமாற்ற கடிதங்கள் நேற்று வியாழக்கிழமை அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என கோமலேஸ்வரன் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலின் ஆலோசனையின் பேரிலேயே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .