2026 மே 04, திங்கட்கிழமை

பிறந்தநாளன்று ஆசிரியர் தற்கொலை; வாழைச்சேனையில் சம்பவம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 17 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இன்று செவ்வாய்கிழமை நண்பகல் வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்பிஜயா தமிழ்செல்வி வயது (40) என்ற ஆசிரியையே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.

குறித்த ஆசிரியையின் பிறந்த தினமாக இன்று, ஆலய வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு வீடு திரும்பியவர், அவரது படுக்கையறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் வாழைச்ண்னை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .