2026 மே 04, திங்கட்கிழமை

இந்திய எம்.பி.கள் நாளை கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற  உறுப்பினர்கள் குழு  நாளை வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இக்குழுவினர்,  கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தையும் திறந்து வைக்கவுள்ளனர்.

அத்துடன், வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் இயங்கிவரும் இந்தியாவின் சேவா அமைப்பினால் கிழக்கு மாகாணத்திலுள்ள விதவைகளுக்காக நடத்தப்பட்டுவரும் தொழிற்பயிற்சி நெறியினையும் இக்குழுவினர் பார்வையிடவுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .