2026 மே 04, திங்கட்கிழமை

தீர்வை செலுத்தாத சிகரெட்டுக்கள், அனுமதிப்பத்திரமின்றி விற்க முயன்ற வொட்கா போத்தல்களுடன் நால்வர் கை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 22 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்வை செலுத்தப்படாத ஒருதொகை சிகரெட்டுக்களையும் செங்கலடிப் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி விற்பனை செய்ய முற்பட்ட 26 வெளிநாட்டுக் குடிவகையான வொட்கா போத்தல்களையும் தாம் கைப்பற்றியுள்ளதுடன், 4 பேரைக் கைதுசெய்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் எம்.சுசாதரன் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை  காலை தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இவை  கைப்பற்றப்பட்டுள்ளன. 

டுபாய் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு விற்பனைக்குத் தயாராகவிருந்த தீர்வை செலுத்தப்படாத 37 கோல்ட் லிப் சிகரெட் பெட்டிகள் இதில் அடங்குவதாகவும் அவர் கூறினார்.

கைதுசெய்யப்பட்ட இந்த 4 பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர்  குறிப்பிட்டார். 

இச்சோதனை நடவடிக்கையினை மதுவரித் திணைக்கள அத்தியட்சகர்  எம்.சுசாதரன், மட்டக்களப்பு கலால் திணைக்கள பொறுப்பதிகாரி பிரதான மதுவரி பரிசோதகர் எஸ்.ரஞ்சன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .