2026 மே 04, திங்கட்கிழமை

பேத்தாழையில் பொது நூலகத்தில் உலக புத்தக தினம் கொண்டாடல்

Super User   / 2012 ஏப்ரல் 23 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


உலக புத்தக தினத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை, பேத்தாழை பொது நூலகத்தில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.

இதன்போது, நூல் குறித்த விழிப்புணர்வு, நூல்களின் மகத்துவத்தை ஞாபகமூட்டல் என்கின்ற தொனிப் பொருளில் கருத்துக்கள் வழங்கப்பட்டதுடன் மாணவர்கள் பங்குபற்றிய - விசேட வினா விடை போட்டியும் நடாத்தப்பட்டது.

புத்தக தின கொடி அணிதல், நூல்களின் பயன் பற்றி விளக்குகின்ற வாக்கிய அட்டைகள் காட்சிப்படுத்தல், அரியபெரும் உசாத்துணை நூல்களை பார்வையிடல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பேத்தாழை பொது நூலகத்தின் நூலகர் தி.சரவணபவான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் கலந்துகொண்டு, வினா விடை போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .