2026 மே 04, திங்கட்கிழமை

பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்களுடனான சந்திப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூர் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்ற நிறுவனங்களின் பிரமுகர்களுடனான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில்
மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சர் டாக்டர். துரையப்பா நவரெட்ணராஜா மற்றும்
அமைச்சின் செயலாளர் பத்தமராஜா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தின் பால் உற்பத்தி தற்போது அதிகரித்துள்ள நிலையில் அதனை கொள்வனவு செய்கின்ற கம்பனிகள் அதிக அக்கறைகொள்வதில்லை என உள்ளூர் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவின் விலையுடன் ஒப்பிடுகின்ற போது உள்ளூர் கம்பனிகளால் உற்பத்தி செய்யப்படுகின்ற பால்மாவின் உற்பத்தி செலவு அதிகரித்து காணப்படுகின்றது. இதனடிப்படையில் உள்நாட்டு கம்பனிகள் பால் கொள்வனவில் அதிக அக்கறைகாட்டாததே இதற்கு காரணம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பிரச்சினை முதலமைச்சர் மற்றும் மாகாண கால்நடை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, எதிர்வரும் 3ஆம் திகதி கொழும்பில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக கொள்கை ரீதியிலான ஓர் முடிவு எடுக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பிலான எழுத்து மூலமான கடிதம் ஒன்றும் நாளை அனுப்பிவைப்பகப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

உள்நாட்டு கம்பனிகளின் சார்பில் மில்கோ, நெஸ்லே மற்றும் பலவத்தை ஆகியன இச்சந்திப்பின்போது கலந்துகொண்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .