2026 மே 04, திங்கட்கிழமை

வாகரை மக்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 26 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கதிரவெளி தோணிதாட்டமடு மக்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி மத்திய கிளை இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை வழங்கியுள்ளது.

கதிரவெளி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மூக்கு கண்ணாடி விநியோக வைபவத்தில் கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் பிரதம அமைப்பாளர் டி.எம்.சந்திரபால பிரதம அதிதயாக கலந்துகொண்டு கண்ணாடிகளை வழங்கி வைத்தார்.

மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இம்மக்கள் இந்நடவடிக்கைக்காக நன்றி
தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சுமார் 150 பேருக்கு இலவசமாக 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூக்குக் கண்ணாகடிள் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .