2026 மே 04, திங்கட்கிழமை

வலையிறவு பாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 26 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)


மட்டக்களப்பு நகரையும் வவுணதீவு பிரதேசத்தையும் இணைக்கும் வவுணதீவு, வலையிறவு பிரதான வீதியில் உள்ள வலையிறவுப் பாலம் திருத்தவேலை காரணமாக எதிர்வரும் மே 4ஆம் திகதி இரவு 10 மணிமுதல் எட்டாம் திகதி வரை நான்கு நாட்களுக்கு தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வலையிறவு முதல் ஆய்த்தியமலை வரை வீதி புனரமைப்பு வேலை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வலையிறவு சின்னபாலமும் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளது.

இதற்காக தற்காலிக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இந்த நான்கு நாட்களிலும் தற்காலிக பாலத்தினை அமைப்பதற்காகவே வீதி மூடப்பட உள்ளது.

குறித்த நான்கு நாட்களிலும் பொதுமக்கள் மாற்று பாதைகளை உபயோகிக்குமாறு இவ்வறிவித்தலை விடுத்துள்ள கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .