2026 மே 04, திங்கட்கிழமை

வெளிவாரி பட்டதாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 28 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

கிழக்கு பல்கலைக்கழகத்தில்  வெளிவாரியாக  பட்டப்படிப்பை  நிறைவு செய்த பட்டதாரிகளுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று சனிக்கிழமை கிழக்கு பல்கலைக்கழக கல்லடியிலுள்ள சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா, சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிரேம்குமார், கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி பிரிவுக்கான பணிப்பாளர் ஏ.அன்ரூ, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பதிவாளர் எம்.மகேசன், வெளிவாரி பிரிவுக்கான சிரேஷ்ட உதவி பதிவாளர் உட்பட
கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள், உதவி பதிவாளர்கள், சிரேஷ்;ட விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக பட்டப்படிப்பை நிறைவு செய்த 752 பட்டதாரிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .