2026 மே 04, திங்கட்கிழமை

படகிலிருந்து தவறி வீழ்ந்து மீனவர் பலி

Super User   / 2012 ஏப்ரல் 29 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு வாழைச்சேனை துறைமுகத்தில் வைத்து மீனவர் ஒருவர் படகில் இருந்து தவறி விழுந்து முச்சுத்திணறி  உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மாத்தறை வெலிகமயை சேர்ந்த எம்.ஏ. சாந்தகுமார வயது (38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கடற்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டு வாழைச்சேனை மாவட்ட வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மரணம் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .