2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. பாடுமீன் கிராம மட்ட சங்கத்தினரால் சுயதொழில் கடன் வழங்கல்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 30 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடி, திருச்செந்தூர் பாடுமீன் கிராம அமைப்பினரால் இன்று திங்கட்கிழமை பிற்பகல் உறுப்பினர்களுக்கான சிறுதொழில் வாழ்வாதாரக் கடன்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை கிரைஸ்ரன் அவுட்ஸ்கோன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில், 5000, 15,000, 25,000 ரூபா வீதம் 12பேருக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டன.

பாடுமீன் கிராம மட்ட அமைப்பின் தலைவி திருமதி கிறேஸ்ரஜனி சாந்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எகெட் நிறுவனத்தின் சமூக ஒருங்கு திரட்டலும், வலுவூட்டலும் திட்டத்தின் பி.கந்தசாமி, கல்லடி டச்பார் புனித இங்ஞாசியார் தேவாலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் ஜேசப் மேரி, எகெட் ஆளணி நிருவாக முகாமையாளர் எஸ்.தர்மகுலராஜா, திட்ட முகாமையாளர் எஸ்.ஓ.ஜெயானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடுமீன் சங்கத்திற்கான நடைமுறைக் கணக்கு புத்தகம், காசோலைப் புத்தகம் ஆகியனவும் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.

இக்கடன்கள் குறிப்பிட்ட குழும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில்களை மேற்கொள்ளல், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில்களை விருத்தி செய்தல் ஆகிய நோக்கங்களுக்காக வழங்கப்படுவதாக பாடுமீன் கிராம அமைப்பின் செயலாளர் சகாயராணி விஜயநாதன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .