2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் அதிக வாக்காளர்களைக் கொண்ட மண்முனை வடக்கு பிரதேசம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 12 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள வாக்காளர்களில் அதிகமானோர் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலேயே உள்ளனர் என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இப்பிரிவில் 56726 வாக்காளர்கள் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தவிர செங்கலடி செயலப்பிரிவில் 43437 வாக்காளர்களும் களுவாஞ்சிக்குயில் 40133 வாக்காளர்களும் வெல்லாவெளியில் 28092 வாக்காளர்களும் காத்தான்குடியில் 26775 வாக்காளர்களும் ஏறாவூர் நகரில் 22124 வாக்காளர்களும் ஓட்டமாவடியில் 15301 வாக்காளர்களும் வாழைச்சேனை மத்தியில் 16190 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

அத்துடன், வாழைச்சேனையில் 14900 வாக்காளர்களும் கொக்கட்டிச்சோலையில் 15827 வாக்காளர்களும் கிரானில் 16245 வாக்காளர்களும் வாகரையில் 13344 வாக்காளர்களும் வவுணதீவில் 17393 வாக்காளர்களும் ஆரையம்பதியில் 20632 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் மொத்தமாக 347099 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .