2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண தேர்தலில் புதிய இடதுசாரி முன்னணி தனித்து போட்டி

Menaka Mookandi   / 2012 ஜூலை 12 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான புதிய இடதுசாரி முன்னணி தனித்துப் போட்டியிடவுள்ளதாக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கணபதிப்பிள்ளை பரணீதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா ஆகிய தொகுதிகளில் தனது தலைமையில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தே தேர்தல் களத்தில் இறங்க திட்டமிட்டிருந்த போதிலும் ஆசன ஒதுக்கீடின்மையால் தனித்துப் போட்டியிட முன்வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் பிரசார பணிகளுக்காக அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் சந்திரசிறி கஜதீர ஆகியோரும் வரு கை தரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .