2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

வவுணதீவுப் பிரதேச வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவி

Super User   / 2012 ஜூலை 26 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

வவுணதீவுப் பிரதேச வறிய மாணவர்களின் கல்வியினை மேம்படுத்த சிறுவர் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் பி.பி.டி.ஆர்.ஓ நிறுவனம் என்பவற்றினால் உதவி வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

வவுணதீவு பிரதேச செயலகத்தில் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ரி.மதிராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, வறிய மாணவர்களின் பெற்றார்களுக்கு சுயதொழிலுக்காக தையல் இயந்திரம், வாழ்வாதார நிதியுதவி வழங்கப்பட்டன.

அத்துடன் மாணவர்களின் போக்குவரத்தை இலகுபடுத்த துவிச்சக்கர வண்டிகள், அப்பியாசக் கொப்பிகள் மற்றும் புத்தக பைகள் என்பன வழங்கப்பட்டன.

வறிய மாணவர்களின் குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதனுடாக மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவே இந்த  உதவிகள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .