2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

சூழலைப் பாதுகாப்போம் செயற்திட்டத்தின்கீழ் சிரமதான பணியும் மக்கள் சந்திப்பும்

Kogilavani   / 2012 ஜூலை 27 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)

சூழலைப் பாதுகாப்போம், டெங்குநோயைக் கட்டுப்படுத்துவோம் எனும் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பெரியபோரதீவில் உள்ள காளிகோவிலை சூழவுள்ள பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.

களுவாஞ்கிக்குடி பொலிஸாரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இச்சிரமதான பணியில் கிராம மக்கள், கிராம சேவகர், மக்கள் தொடர்பாடல் பொறுப்பதிகாரி துஷார உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மக்கள் சந்திப்பொன்றும் இதன்போது இடம்பெற்றது.

இச்சந்திப்பில், மது ஒழிப்பு, டெங்கு ஒழிப்பு, நடமாடும் சேவை, மருத்துவமுகாம், கிராமத்தின் தேவைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .