2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இலங்கை மதுவரி திணைக்களத்தின் நூற்றாண்டு விழா

Suganthini Ratnam   / 2012 ஜூலை 27 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை மதுவரித் திணைக்களத்தின் நூற்றாண்டு விழா நேற்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

1913ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை மதுவரித் திணைக்களத்தின் நூற்றாண்டு விழா மட்டக்களப்பு  மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தலைமையில நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் டி.எச்.கப்புயாராய்ச்சி பிரதம அதிதியாகவும் மதுவரித் திணைக்கள ஆணையாளர் ஏ.போதிலகம மற்றும் மட்டக்களப்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் ரவீந்திர வைத்தியலங்கார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நீண்டகாலம் பணியாற்றிய ஊழியர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்இ மதுவரித் திணைக்களத்தினால் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன்இ மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லத்திற்கு மதுவரித் திணைக்களத்தினால் வர்ணம் பூசப்பட்டதுடன்இ இல்லத்திற்கு பல பொருட்களும் அன்பளிப்பு செய்யப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .