2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

காத்தான்குடி கடற்கரையில் பொதுக்கிணறு அமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 30 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரையில் மீனவர்களுக்கான பொதுக்கிணற்றினை அமைப்பதற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் முஸ்லிம் பெண்கள் அமைப்பின் நிதியுதவியுடன் இக்கிணறு அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா, புதிய காத்தான்குடி பெரிய ஜும் ஆ பள்ளிவாசலின் பேஷ் இமாம் மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காத்தான்குடி கடற்கரையில் மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இப்பொதுக்கிணறு அமைக்கப்படவுள்ளதாக காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .