2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஐ.ம.சு.கூஇல் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கூட்டம்

Kogilavani   / 2012 ஜூலை 30 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, பிரதியமைச்சர்களான ஏ.ஆர்.எம்.ஏ.காதர், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தன, கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒழுங்கு தொடர்பாக ஆராயப்பட்டதுடன் கட்சி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆரயாப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .