2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 30 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரிலோஹித்)

மட்டக்களப்பு நகரசபைக்குட்பட்ட சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் மூன்று இலட்சம் ரூபா இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மைதானத்தை சுற்றி இரும்புவேலியிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இதன்போது சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டு கழகத்தின் வருடாந்த செய்தி மடலும் வெளியிடப்பட்டது.

அத்துடன் இந்நிகழ்வில் யங்ஸ்டார் விளையாட்டு கழகத்தில் இருந்து தேசிய மட்டப்போட்டியில் சாதனை படைத்தவருக்கு பாதணியும் இருதய சத்திர சிகிச்சைக்கு உதவிகோரியவருக்கும் கழத்தின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி தற்போது பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும், உயர்தரப்பரீட்சையில் சாதனை படைத்த மாணவிக்கும் பண உதவிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .