2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2012 ஜூலை 31 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ.ஹுஸைன் )

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில்  காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

தும்பங்கேணியைச் சேர்ந்த மூர்த்தி (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

வயலில் இவர் காவலில் ஈடுபட்டிருந்தபோதே யானையின் தாக்குதலுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் செங்கலடி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .