2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

'பாலம்' செய்தித்தாள் வெளியீடு

Kogilavani   / 2012 ஜூலை 31 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாநகர வரியிறுப்பாளர் சங்கத்தினரின் 'பாலம்' செய்தித்தாள் வெளியிடும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

வரியிறுப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக மாநகர முதல்வர் திருமதி சிவகீதா பிரபாகரன், பிரதி மேயர் ஆப்ரகாம் ஜோர்ச்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கௌரவ அதிதிகளாக மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார், மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன், மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் எஸ்.மோகனராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத் தலைவர் ரஞ்சிதமூர்த்தி, மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

செய்தித்தாளினை அதன் ஆசிரியர் ஏ.எச்.ஏ.ஹூசைன் வரியிறுப்பாளர் சங்கத்தின் தலைவரிடம் வழங்கி வெளியிட்டு வைத்தார்.

அதனையடுத்து, மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன், பிரதி மேர் ஜோர்ச் பிள்ளை, மற்றும் அதிதிகள், வைத்தியக் கலாநிதிகள், வருகை தந்த நிறுவனத்தினர், வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கு வரியிறுப்பாளர் சங்கத்தின் தலைவர் 'பாலம்' இதழின் பிரதிகளை வழங்கிவைத்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .