2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிப்பது பள்ளிவாசல்களை உடைப்பதற்கு வழங்கும் அங்கீகாரம்: மாகாண சபை வேட்பாள

Super User   / 2012 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிப்பது பள்ளிவாசல்களை உடைப்பதற்கு வழங்கும் அங்கீகாரம் என கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே முபீன் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய முபீன்,

"முஸ்லிம்கள் எவரும் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிக்கமாட்டார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக இந்த நாட்டில் இடம்பெற்றுவரும் அநியாயங்களை முஸ்லிம்கள் பார்த்து விட்டும் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிப்பார்கள் என்றால் அது நாம் நமது பள்ளிவாயல்களை உடைப்பதற்கு வழங்கும் அங்கீகாரமாகும்.

தம்புள்ளையில் பள்ளிவாயலை உடைத்த போது அதை அரசாங்கம் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் அதை பார்த்துக் கொண்டிருந்தனர். அதே போன்று தெஹிவளையில் பள்ளிவாயல் மீதும் பேரினவாத சக்கதிகள் காடைத்தனம் செய்தனர்.

அதேபோன்று குருநாகலிலுள்ள கிராமமொன்றில் பள்ளிவாயலில் நோன்பு காலத்தில் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பள்ளிவாயலை சுற்றி வளைத்த பேரினவாத பௌத்த தேரர்கள் பிரித் ஓதினார்கள்.

இவ்வாறு முஸ்லிம்களுக்கெதிராக அரங்கேற்றப்படும் இந்த அராஜகங்கள் முஸ்லிம்களின் புனித பள்ளிவாயலை உடைக்க முற்படும் இந்த நடவடிக்கைகள் முஸ்லிம்களின் புனித பள்ளிவாயல்களை அப்புறப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம்  மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இவைகளை பார்த்துக்கொண்டும் முஸ்லிம்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்க முடியாது. தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் றவூப் ஹக்கீமின் குரல் முதன் முதலாக காத்தான்குடியில் வைத்து ஒலித்த போது இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் வாய் திறக்க ஆரம்பித்தனர்.

ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக அரசாங்கத்தை இந்த விகாரத்தில் விமர்சித்த போது அல்ஜெஸீறா தொலைக்காட்சி தொடக்கம் உலக முஸ்லிம் நாடுகளிலுள்ள பல ஊடக நிறுவனங்கள் தம்புள்ளை பள்ளிவாலை நோக்கி வருகை தந்தன. ஈரான் நாட்டு ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியுடன் இது தொடர்பில் கலந்துரையாடினார். இதற்கு காரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் ஆனித்தரமான கருத்தாகும்.

இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் எழுச்சி பெற தொடங்கியுள்ளன.  கிழக்கு மாகாணத்தில் மாற்றுக் கட்சியிலிருந்த முஸ்லிம் சகோதரர்கள் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் அணி திரளுகின்றனர். எனவே தான் வாக்குகளை சிதறடிக்காமல் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.

  Comments - 0

  • jesmin Wednesday, 01 August 2012 08:45 AM

    வடமத்தி, சப்ரகமுவ மாகானங்களுக்குப்போய் அங்கு நடைபெறும் பிரசாரக்கூட்டங்களில் வெற்றிலைக்குப் போடும் வாக்குகள் உடைத்த பள்ளிவாயல்களை மீண்டும் கட்டுவதற்குப் போடும் வாக்குகள் என்றா பேசப்போகிண்றீர்கள்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .