2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

சுவாமி விபுலானந்தர் சிலை திறப்பு விழாவும் நினைவுதினமும்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 01 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலை திறப்பு விழாவும் விபுலானந்தர் நினைவுதினமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு  மகாவித்தியாலயத்தில் நேற்று     செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் இ.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல் பிரதம அதிதியாகவும் மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர். சுவாமி விபுலானந்தர் நினைவுப்பேருரையை பேராசிரியர் சி.மௌனகுரு நிகழ்த்தினார். இதன்போது கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .