2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

சமுர்த்தி கெகுளு சிறுவர் போட்டி

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி கெகுளு சிறுவர் போட்டி நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அலுவலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்னம் தலைமையில் மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் இக்கெகுளு போட்டி நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் இப்போட்டி பிரதேச மட்டத்தில் நடத்தப்பட்ட நிலையில்,  இதில் தெரிவான மாணவர்கள் மாவட்ட மட்ட இப்போட்டியில் கலந்துகொண்டனர். இதன்போது நடனம், சிறுகதை, பேச்சு, அறிவிப்பு, நாட்டியம், ஓவியம் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

இதில் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .