2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரங்கள் பறிக்கப்பட்டதாக த.தே.கூ.வேட்பாளர் புகார்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                         (கே.எஸ்.வதனகுமார், சுக்ரி,ஜவீந்திரா)
மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தமது சுதந்திரமான தேர்தல் பிரசாரத்திற்கு அரசியல் கட்சியயொன்றினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் இன்று (நேற்று 1.08.2012) நான் எனது ஆதரவாளர்கள் சகிதம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன்.

பால்சேனை கிராமத்தில் நண்பகல் 12.00 மணியளவில் எனது கட்சி சார்பில் அந்த பிரதேசத்திலிருந்து போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளரான பரசுராமன் சிவனேசன் சகிதம் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்.

நானும் அவரும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட வேளை எமது ஆதரவாளர்கள் அங்கு தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர். அவ்வேளை பச்சை நிற ஆட்டோ ஒன்றில் வந்த இரண்டு, மூன்று பேர் வரை அவர்களை அச்சுறுத்தி துண்டுப் பிரசுரங்களை பறித்து சென்றுள்ளார்கள்.

குறித்த நபர்கள் ஐக்கிய மக்கள் சுத்நதிர முன்னனியுடன் இணைந்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்பதை என்னால் அறிய முடிந்தது.

இந் நபர்களின் செயல்பாடுகள் அந்த பிரதேசத்தில் நாம் சுதந்திரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுபடுவதற்கு இடையூறாக இருந்தது. குறித்த சம்பவத்தால் அந்த பிரதேசத்தில்; சுதந்திரமாக தேர்தல்  நடை பெறுமா? என்றொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே நாம் கருதுகின்றோம்

எனவே அந்த பிரதேசத்தில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் என்றாலும் சரி, சுயேட்சைக் குழுக்கள் என்றாலும் சரி சுதந்திரமான முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளார்.

கடிதத்தின் பிரதிகளை தேர்தல் ஆணையாளர்நாயகம், தேர்தல் செயலகம்; கபே அமைப்பின் இணைப்பாளர், இலங்கை தமிழரசு கட்சி தலைவர், ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .