2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

கோட்டைமுனை பிரதேச உணவு விடுதிகளில் சோதனை நடவடிக்கை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு நகரில் உள்ள உணவு விடுதிகளில் சுகாதார சீர்கேடான விடுதிகளை கண்டறியும் நடவடிக்கையின் கீழ் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கோட்டைமுனை பிரதேசத்தில் உள்ள உணவு விடுதிகள் சோதனையிடப்பட்டதுடன் சுகாதார சீர்கேடான முறையில் காணப்பட்ட 6   உணவு விடுதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்ததார்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொறுப்பதிகாரி ஜயசுந்தர தலைமையிலான பொலிஸ் குழுவினரும் கோட்டைமுனை பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகரும் இணைந்து இந்த சோதனையினை மேற்கொண்டனர்.

இதேபோன்று கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனைகளின்போது மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதார சீர்கேடான உணவு விடுதிகள் ஆறு இனங்காணப்பட்டு அவற்றுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொறுப்பதிகாரி ஜயசுந்தர தெரிவித்தார்.

கடந்த காலங்களில் உணவு விடுதிகளின் சுகாதாரம் தொடர்பிலும் அதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பிலும் விடுதி உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.



கடந்த காலங்களில் உணவு விடுதிகளின் சுகாதாரம் தொடர்பிலும் அதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பிலும் விடுதி உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

இதனடிப்படையில் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .