2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

முஸ்லிம் முதலமைச்சரை பெற வேண்டுமாக இருந்தால் முஸ்லிம் காங்கிரஸையே ஆதரிக்க வேண்டும்: சல்மா அமீர் ஹம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                      (எம்.சுக்ரி)
'கிழக்கு மாகாண அடுத்த முதலமைச்சராக மீண்டும் சந்திரகாந்தனையே நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே நாம் முஸ்லிம் முதலமைச்சரை பெறவேண்டுமாக இருந்தால் முஸ்லிம் மக்கள்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையே ஆதரிக்க வேண்டும். தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒன்று பட்டு ஆதரிப்பது போல முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை ஒன்று பட்டு ஆதரிக்க வேண்டும் என காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருமான சல்மா அமீர் ஹம்சா நேற்று தெரிவித்தார்.

மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள ஒல்லிக்குளம், மற்றும் காங்கேயனோடை  ஆகிய கிராமங்களிலுள்ள பெண்களை சந்தித்து கலந்துரையாடியபோதே சல்மா ஹம்சா மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையற்றிய சல்மா அமீர் ஹம்சா, 'தமிழ் மக்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கின்றனர். அதேபோன்று கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும்.

இன்று முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பக்கம் அணி திரண்டு வருகை தருகின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் எழுச்சி பெற்று வருகின்றது.

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் யாரும் முதலமைச்சராக வரமுடியாது.
முஸ்லிம் முதலமைச்சரை பெறவேண்டுமானால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் மாத்திரம்தான் முடியும். கிழக்கு மாகாண அடுத்த முதலமைச்சராக மீண்டும் சந்திரகாந்தனையே நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனவே நாம் முஸ்லிம் முதலமைச்சரை பெறவேண்டுமாக இருந்தால் முஸ்லிம் மக்கள்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையே ஆதரிக்க வேண்டும்.  முஸ்லிம்களின் குரலாக முஸ்லிம் காங்கிரஸ் இன்று திகழுகின்றது.

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக நடக்கும் அநியாயங்களை எந்த வித அச்சமுமின்றி தட்டிக்கேட்கும் ஒரு கட்சியாக இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசே இருக்கின்றது.

தம்புள்ளையில் பள்ளிவாயல் உடைக்கப்பட்ட போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் அரசில் இருந்து கொண்டே அரசின் நடவடிக்கையை பகிரங்கமாக விமர்சித்ததுடன் பள்ளிவாயலுக்காக சர்வதேச ரீதியாக குரல் கொடுத்தார்.

இதைவேறு எந்த முஸ்லிம் கட்சிகளினாலும் செய்ய முடியாது என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் புனித பள்ளிவாயல்கள் இன்று பௌத்த பேரினவாதிகளினால் ஆக்கிரமிக்கப்படும் நிலையில் நாம் நமது வாக்கை யாருக்கு வழங்கப்போகின்றோம் என்பதை தெளிவாக பார்க்கப்போகின்றோம்.

இந்த நிலையில் நாம் நமது வாக்குகளை சிதறடிக்காமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும். காத்தான்குடி நகர சபை உறுப்பினராக இருந்து கொண்டு என்னாலான முழு பங்களிப்பையும் இந்த சமூகத்திற்காக வழங்கிக்கொண்டிருக்கின்றேன். எனவே என்னையும் ஆதரிக்க வேண்டுமென நான் இந்த வேளையில் கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .