2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கொடுவாமடு கிராம மக்களுக்கு நீர் தாங்கிகள் வழங்கல்

Super User   / 2012 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


ஏறாவூர் பற்று, கொடுவாமடு கிராமத்தை சேர்ந்த கிராம மக்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை நீர் தாங்கிகள் வழங்கப்பட்டன. சுமார் 40 பயனாளிகளுக்கு குடிநீரை சேமிப்பதற்காக நீர் தாங்கிகள் வழங்கப்பட்டன.

இலங்கைகைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்ளப்பு மாவட்ட கிளையினால் முன்னெடுக்கப்படுகின்ற சுகாதார மேம்பாட்டு திட்டத்திற்கமையவே நீர் தாங்கிகள் வழங்கப்பட்டன.

இலங்கை  செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் செயலாளர் சா.மதிசுதன், கிளை நிறைவேற்று உத்தியோகஸ்தர் வி.பிறேமகுமார் மற்றும் சுகாதாப் பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நீர் தாங்கிகளை கையளித்தனர்.

தற்போதைய வரட்சியான காலத்தில் நீரை சேமித்து பயன்படுத்துவதற்கு இந்த நீர் தாங்கிகள் பெரிதும் உதவியாக உள்ளது என குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .