2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மாற்றுத்திறனுடைய தேசிய பெண்கள் சாரணிய நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் உள்ள சர்வோதயம் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தில் மாற்றுத்திறனுடைய தேசிய பெண்கள் சாரணிய நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இலங்கைப் பெண்கள் சாரணிய அமைப்பின் பணிப்பாளர் சௌமியா ஜயசேகர தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாற்றுத்திறனுடைய பிள்ளைகளின் பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், இந்தப் பிள்ளைகளின் கைவேலைப்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதனை அடுத்து மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் திறன்களை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.

கொழும்பு, மொரட்டுவ, நுகேகொடை, காலி, மட்டக்களப்பு, வாகரை, ஓட்டமாவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200 இற்கும்; மேற்பட்ட மாற்றுத்திறனுடைய பெண் சாரணியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் வாசுதேவன், மாநகர பிரதி மேயர் ஆப்பிரகாம் ஜோர்ச்பிள்ளை, பெண்கள் சாரணிய பிரதான சாரணிய ஆணையாளர் திருமதி மங்கள பீரிஸ், மேல்மாகாண ஆணையாளர் மாலினி திஸாநாயக்க, கிழக்கு மாகாண பெண்கள் சாரணிய ஆணையளார் டிலாந்தி மோகனகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .