2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

அஞ்சல் வாக்குகளை அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான செலமர்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                          (எம்.சுக்ரி)
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அஞ்சல் வாக்குகளை அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வொன்று மட்டக்களப்பு கச்சேரியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அஞ்சல் வாக்களிப்பு நடைபெறும் இடங்களில் இருந்து அஞ்சல் வாக்குகளை அத்தாட்சிப்படுத்தும் திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்ணாயக்க இவர்களுக்கான அறிவுரைகளையும் அஞ்சல் வாக்குகளை அத்தாட்சிப்படுத்தும் முறை குறித்தும் விளக்கமளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .