2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பெண்கள் தலைமைதாங்கும் குடும்ப தலைவிகளுக்கு சுய தொழில் உபகரணங்கள் வழங்கல்

Super User   / 2012 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா, எம்.சுக்ரி)

மட்டு. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் பெண்கள் தலைமைதாங்கும் குடும்ப தலைவிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் திட்டத்தில் 22 லட்சம் ரூபா பெருமதியான சுய தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.றிஸ்வி தாஸிம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் உட்பட பலர் கலந்துகொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.

ஜப்பான் நிறுவனத்தின் மனிதாபிமான நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஐ.எல்.ஓ. நிறுவனத்தின் வழிகாட்டலில் காவியா நிறவனத்தின் அனுசரனையில் முன்னெடுக்கப்படும் பெண்கள் தலைமைதாங்கும் தெரிவு செய்யப்பட்ட 30  குடும்பத் தலைவிகளுக்கு சுயதொழில் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் 22 லட்சம் ரூபா பெருமதியான சுயதொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .