2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

புதிய மீன் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் புதிய மீன் விற்பனை நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

தேசத்தின் மகுடம் கண்காட்சியை முன்னிட்டு இபார்ட் அமைப்பின் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த மீன் விற்பனை நிலையம் அமைக்கப்படவுள்ளது.

மீன்பிடி கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குவால் லங்கேஸ்வர தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு நகர பொதுச்சந்தைக்கு அருகில் அமைக்கப்படும் இந்த விற்பனை நிலையத்தின் மீனவர்களுக்கும் ஏனைய விற்பனையாளர்களுக்கும் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கவுள்ளன. இந்த மீன் விற்பனை நிலையத்தின் பணிகள் ஒரு மாத காலத்தினுள் நிறைவுபெறும் என கூட்டுத்தாபனத் தலைவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .