2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

அறபா சமூகமட்ட அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் புதிய காத்தான்குடி அறபா சமூகமட்ட அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வும் அதன் அங்கத்தவர்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுக்கடன் வழங்கும் வைபவமும் நேற்று வியாழக்கிழமை புதிய காத்தான்குடி சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.

அறபா சமூக மட்ட அமைப்பின் தலைவி எம்.ஏ.ஸாஹிதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு கல்முனை இயக்குனர் அருட் தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன் மற்றும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாவின் செயலாளர் மௌலவி எம்.எம்.ஜிப்ரி மதனி, கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.உமர்லெவ்வை உட்பட எஹெட் கரித்தாஸ் நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது இவ்வமைப்பின் அங்கத்தவர்கள் 11பேருக்கு தலா ஒருவருக்கு இருபதாயிரம் ரூபா வீதம் வாழ்வாதாரத்துக்கான வட்டியில்லா கடன் வழங்கி வைக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .