2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின் வாகனம் மீது கல்வீச்சுக் தாக்குதல்

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு கோயில்போரதீவு பகுதியில் கிழக்கு மாகாண சபையில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின் வாகனம் மீது கல்வீச்சுக் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வேட்பாளர் மார்க்கண்டு நடராசா தெரிவிக்கையில்:

இன்று வெள்ளிக்கிழமை கோயில்போரதீவு கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஆதரவாளரொருவர் வீட்டில் மதிய உணவுக்காக சென்றிருந்தோம். அந்நேரம் வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாகனம் மீது கல்வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.

இதன் காரணமாக வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களில் ஒருவர் தலைக்கவசம் அணிந்திருந்தார்.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரியிடமும், களுவாஞ்சிக்குடி பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .