2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதாக புகார்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித். எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில், போரதீவுப் பகுதியில் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்த இரு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் வாகனங்கள் மீது நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதேவேளை,

கோயில்போரதீவு பகுதியில் தேர்தல் பிரசாரப்பணிகளில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின் வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

கோயில்போரதீவு பிரதான வீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கோவிந்தன் கருணாகரனின் (ஜனா)  வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது வாகனத்தின் அருகில் நின்ற வேட்பாளரின் சகோதரர் காயமடைந்துள்ளதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக கோவில்போரதீவுக்கு சென்று வீதியின் அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு பிரசாரப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தவேளையில் மண்டூரில் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்த ஜனாவின் சகோதரர் அவ்வீதி வழியாக வரும்போது, வழியில் வேட்பாளர் ஜனாவின் வாகனம் வீதியில் நிற்பதைக்கண்டு அங்குசென்று சாரதியுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கற்களினால் தாக்குதல் நடத்திவிட்டுச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது முகத்தில் கடும் காயங்களுக்குள்ளான ஜனாவின் சகோதரர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கோயில்போரதீவு பகுதியில் தேர்தல் பிரசாரப்பணிகளில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின் வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கோட்டைக் கல்லாறை சேர்ந்த வேட்பாளர் மார்க்கண்டு நடராசாவின் வாகத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் வேட்பாளர் மார்க்கண்டு நடராசா தெரிவிக்கையில்,
 
இன்று வெள்ளிக்கிழமை கோயில்போரதீவு கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஆதரவாளரொருவரின் வீட்டிற்கு மதிய உணவுக்காக சென்றிருந்தோம்.
 
வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாகனம் மீது கல்வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள். இதன் காரணமாக வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களில் ஒருவர் தலைக்கவசம் அணிந்திருந்தார்.
 
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரியிடமும், களுவாஞ்சிக்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளை வானில் வந்த குழுவினால் அச்சுறுத்தல்

இதேவேளை, கல்லடி பிரதேசத்தில் வெள்ளை வானில் வந்த  குழுவொன்றினால் தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர் சோமசுந்தரம் யோகானந்தராஜா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் இன்று  முறைப்பாடு செய்துள்ளார்.
 
இது தொடர்பாக எழுத்து மூலம் அளித்த முறைப்பாட்டில், 

'மட்டக்களப்பு நொச்சிமுனை மற்றும் பூநொச்சிமுனை பகுதிகளில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 9ஆம் திகதியும் நேற்று வெள்ளிக்கிழமையும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை அங்கு வந்த சிலர் எமது பிரசார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்கள்.

குறிப்பாக, நேற்று வெள்ளிக்கிழமை நொச்சிமுனை பகுதியில் ஆதரவாளர்களுடன் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை சில பெண்கள் உட்பட வெள்ளை வானில் வந்த குழுவொன்று எமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு தேர்தல் பிரசார பிரசுரங்களையும் பறித்து சென்றுள்ளார்கள். அவர்களினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்தும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாமல் திரும்பியுள்ளேன்.

தங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்திய இந் நபர்கள் குறித்த பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் எவரும் வரக் கூடாது என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்கள்.

குறித்த சம்பவமானது சுதந்திரமான தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடையாக உள்ளது. எனவே மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் வேட்பாளர்கள் எந்த கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சுதந்திரமான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடிய சூழ்நிலையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அந்த முறைப்பாட்டு கடிதப் பிரதிகள், தேர்தல் ஆணையாளர் நாயகம், தேர்தல் செயலகம், இணைப்பாளர் 'கபே' தலைவர், இலங்கை தமிழரசு கட்சி மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு செயலகம் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .