2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேற்கொள்ளவுள்ள தேர்தல் பிரசார நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டதுடன்,  பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு ஆகிய தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேற்கொள்ளவுள்ள பிரசார நடவடிக்கைளும் இதன்போது ஒழுங்குபடுத்தப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, மஹிந்தானந்த அளுத்கமகே, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் சச்சின்வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .