2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிவாசலை புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைக் கிராமத்தில் சேதமாக்கப்பட்ட முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலை உடனடியாகப் புனரமைப்பதற்கும் எரிந்து சேதமடைந்த தற்காலிக வீடுகளை திருத்தி அமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நேற்று தெரிவித்தார்.

இந்தக் கிராமத்தில் பொலிஸ் பாதுகாப்பு அரண் ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்போது எரிவடைந்த தற்காலிகக் குடிசைகளின் உரிமையாளர்களுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, உன்னிச்சை பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் மற்றும் பெண் ஒருவரை கோடாரியால் வெட்டிய சம்பவம் தொடர்பான  சூத்திரதாரிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம், பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .