2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மட்டக்களப்பில் மினி சூறாவளி; பல வீடுகள் சேதம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான், ஜதுசன், ரி.லோஹித், ஜவீந்திரா)

மட்டக்களப்பு மடாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமான - போரத்தீவு பிரதேச செயலகப்பிரிவில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளியால் பலவீடுகள்  சேதமடைந்துள்ளன.

ஆனைகட்டியவெளியில் 5வீடுகள் முற்றாக அழிந்துள்ளதுடன் பாலையடிவெட்டையில் 14 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் 73 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஒரு ஆலயமும் சேதமடைந்துள்ளது.

போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட ஆனைகட்டியவெளி, பலாச்சோலை, பாலையடிவட்டை ஆகிய பகுதிகளே பாதிக்கப்பட்டுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்னம் தெரிவித்தார்.

இப்பகுதியில் முற்றாக 21 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 52 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் காரணமாக மூன்று வயது குழந்தையொன்று காயமடைந்து களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற பிரதேசமான இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக கூடாரங்கள் மற்றும் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் வில்வரெட்னம் தெரிவித்தார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

முழுமையாக வீடுகள் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கான தற்காலிக கூடாரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் உலர் உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் இன்பராஜா தெரிவித்தார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட இடங்களை கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான கோவிந்தன் கருணாகரன்(ஜனா), இந்திரகுமார் பிரசன்னா, வீ.ஆர்.மகேந்திரன், நடராஜா(நடா), குணசேகரம்(குணம்) ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .