2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கறுவாக்கேணியில் த.தே.கூட்டமைப்பு வேட்பாளரும் ஆதரவாளரும் மிரட்டல்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                              (ஜவீந்திரா)
மட்டக்களப்பு, வாழைச்சேனை கறுவாக்கேணி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த, தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் கிருஸ்ணப்பிள்ளை சேயோன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் மிரட்டப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வேட்பாளர் கிருஸ்ணப்பிள்ளை சேயோன் தெரிவிக்கையில்:

கறுவாக்கேணி கிராமத்தில் இன்று திங்கட்கிழமை பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் என்னையும் எனது ஆதரவாளர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதுடன் எங்களது தமிழரசுக் கட்சிக்கும் அவதூறாக பேசிவிட்டுச் சென்றனர்.

பின்னர் இவர்கள், உழவு இயந்திரத்தில் நாற்பது பேருடன் தடி, பொல்லு சகிதம் வந்து எனது வாகனத்தில் கட்டியிருந்த பதாதைகளையும் எனது ஆதரவாளர்கள் கையில் இருந்த துண்டுப் பிரசுரங்களையும் கிழித்துவிட்டு,  இப்பிரதேசத்தில் நீங்கள் பிரசாரத்தை செய்ய முடியாது என்றும், என்னையும், எனது ஆதரவாளர்கள் அனைவரையும் அடிப்பதாகவும் கூறினார்கள்.

இது தொடர்பாக கோறளைப்பற்று வாழைச்சேனை தெரிவு அத்தாட்சி அதிகாரியிடமும், வாழைச்சேனை பொலிஸில் எழுத்து மூல புகார் செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .