2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

'மட்டக்களப்பு மக்கள் தமிழரசு கட்சியின் வெற்றியை உறுதி செய்யவேண்டும்'

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டும். கூட்டமைப்பு அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதன்மூலம் அரசின் திட்டத்தை முறியடித்து எமது ஒற்றுமையை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்ட வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கன்னங்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இக்கருத்தரங்கு நேற்று மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் த.மனோகரரசா (செல்வா) தலைமையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், மட்டு. மாநகரசபை எதிர்க் கட்சித் தலைவர் பெனடிக் தனபாலசிங்கம், வவுணதீவு பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவர் நிமலன், பிரதேச சபை உறுப்பினர் கேசவன், களுவாஞ்சிக்குடி பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் பகீரதன், ஆதரவாளர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .