2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

மட்டு. பிரதேச செயலங்களில் 'ரட்டவிருவோ' அமைப்பின் சேவை

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


புலம்பெயர் உழைப்பாளர் சமூகத்தின் நலனோம்பல் அவர்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள 'ரட்டவிருவோ' என்னும் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளன.

இதன்போது இலங்கை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உதவி முகாமையாளர் சுரேஷ்குமார் சண்முகம்,  இலங்கை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மட்டக்களப்பு நிலைய பொறுப்பதிகாரி நிருத்பாவா ஆகியோர் 'ரட்டவிருவோ'  அமைப்பு தொடர்பான அறிவூட்டலை வழங்கினர். இதன் பின்னர்; இந்த அமைப்புக்கான பிரதேசமட்ட செயற்குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்த அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மாவட்ட ரீதியான அமைப்பு ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உதவி முகாமையாளர் சுரேஷ்குமார் சண்முகம் தெரிவித்தார்.
இலங்கை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 'ரட்டவிருவோ' எனப்படும் கடல் கடந்த வீரர் அமைப்பை  ஆரம்பிப்பதற்கான கூட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு மற்றும் வவுணதீவு பிரதேச செயலகங்களில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றன.

இதில் பிரதேச செயலாளர்களான எஸ்.கிரிதரன், கே.தவராஜா, கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுநர்கள், வெளிநாடு சென்று திரும்பியோர், வெளிநாடுகளில் உள்ளவர்களின் குடும்ப உறவினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .