2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

புதிய காத்தான்குடி அப்றார் நகர் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் மேற் கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி அப்றார் நகர் பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நேற்று ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது இப்பிரதேசத்தில் 187 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள 8 கொங்கிறீட் வீதிகளுக்கான வேலைகள் பிரதியமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 30 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்வுள்ள ஹிழுறியா ஜூம்ஆ பள்ளிவீதிஇ தலா 10 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள முகைதீன் பள்ளிவீதிஇ சரீப் வீதி ஆகியவற்றிற்கான அடிக்கல் நடப்பட்டது.

இதேவேளை இப்பிரதேசத்திலுள்ள விளையாட்டுக்கழகங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் என்பவற்றிற்கான கொடுப்பனவுகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

25 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள சுகாதார வைத்திய நிலையத்திற்கான அடிக்கல்லையும் பிரதிமைச்சர்  நாட்டி வைத்தார். 2 கோடி ரூபாய் செவில் அமைக்கப்பட்ட முதியோர் இல்ல வீதியையும் மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இவ்வைபவங்களில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட்இ காத்தான்குடி நகர சபையின் பிரதி தலைவர் எம்.எம்.ஜெஸீம் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஊடக இணைப்பாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .