2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

காத்தான்குடியில் பெண்களுக்கான பள்ளிவாசல் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதான வீதியில் முதல் தடவையாக  பெண்களுக்கான  பள்ளிவாசல் அமைப்பதற்கு அடிக்கல் நேற்று செவ்வாய்க்கிழமை நாட்டப்பட்டது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சாவின் ஏற்பாட்டிலும்  முஸ்லிம் பெண்கள் அமைப்பின் நிதியதவியுடனும் பெண்களுக்கான இந்தப் பள்ளிவாசல் அமைக்கப்படவுள்ளது.

இந்தப் பள்ளிவாசல் அமைப்பதற்காக முஸ்லிம் பெண்கள் அமைப்பு 18 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .