2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மினி சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக கூடாரங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிக கூடாரங்கள் மற்றும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட ஆனைகட்டியவெளி, பலாச்சோலை, பாலையடிவட்டை ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த மக்கள் இந்த மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்டனர்.

இப்பகுதியை சேர்ந்த 73 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றில் 21 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 52 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன.

அத்துடன் இரு ஆலயங்கள் சிறு சேதங்களுக்குள்ளாகியதுடன் மூன்று வயது குழந்தை மற்றும் பெண்ணொருவரும் காயமடைந்தனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் தற்காலிக கூடாரங்கள் மற்றும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் இன்பராஜா உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் வீடுகளை மீள அமைப்பதற்கான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அத்துடன் சேதங்களுக்கான நஷ்ட ஈடுகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .