2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கன்னன்குடாவில் திரிக்கப்பட்ட தேர் வடம் கொக்கட்டிச்சோலை தான்தோறீஸ்வரர் ஆலயத்தில் ஒப்படைப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

பிரசித்திபெற்ற கொக்கட்டிச் சோலை தான்தோறீஸ்வரர் ஆலய தேருக்கான வடம் கன்னன்குடா மக்களால் நேற்று வெள்ளிக்கிழமை தோளினால் சுமந்து செல்லப்பட்ட நிலையில் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கொக்கட்டிச்சோலை தான்தோறீஸ்வரர் ஆலயத்திற்கும் கன்னன்குடா கிராமத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ள நிலையில் மரபு ரீதியாக கன்னன்குடா கிராம மக்களால் தேருக்கான வடம், தேர்அச்சி, தேர்ச் சில்லு என்பன செய்த கொடுக்கப்படுவதுடன் கொடிமரம் சீவுவதும் வழக்கமாகும்.

கடந்த 1976 ஆம் ஆண்டு தேர் வடம் திரித்து வழங்கப்பட்ட நிலையில் இவ் வருடம் மீண்டும் திரிக்கப்பட்டது.

இவ் வடமானது நேற்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு கன்னன்குடா கண்ணக அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை ஆராதனையுடன் நூற்றுக் கணக்கான கிராம மக்களால் தோழினால் சுமந்து செல்லப்பட்ட நிலையில் 16 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள தான்தோறீஸ்வரர் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டது.

வடம் சுமந்து செல்லும் வீதியில் ஆங்காங்கே ஆலய நிரவாகிகளாலும் வர்த்தகர்களாலும் தண்ணீர் பந்தல்கள் அமைத்து குழிர்பானங்கள் வழங்கப்பட்டதுடன் பட்டாசு கொழுத்தியும் வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .