2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, பட்டிப்பளை (கொக்கட்டிச்சோலை) பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாகன விபத்தில் மரணடைந்துள்ளார்.

ஒலுவில் பகுதியைச் சேர்ந்த இக்பால் (வயது 43) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

கொக்கட்டிச்சோலை தபால் நிலையத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இவர் மோட்டார் சைக்கிளில் கடைக்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது  கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றது. 
மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்டபோது எதிரே வந்த டிரக்டரில் மோதுண்டு இவர் படுகாயமடைந்ததாக பட்டிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

உடனடியாக மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாகவம் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணையை பட்டிப்பளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .