2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வறுமையான குடும்பங்களுக்கு குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான பணம் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


காத்தான்குடி பிரதேச செயளாலர் பிரிவிலுள்ள வறுமையான சமுர்த்தி நன்மை குடும்பங்கள் சுத்தமான நீரை பெற்றுக்கொள்ளும் பொருட்டு தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் குடி நீரை பெற்றுக்கொள்வதற்காக 15 குடும்பங்களுக்கான பணம் இன்று காலை பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் காத்தான்குடி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா, காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஏ.எச்.முகம்மட், முக்கிய்ஸ்த்தர் சாந்தி முகைதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஒரு குடும்பத்திற்கு 6000 ரூபா வீதம் வழங்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .