2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூரைத்தகடுகள், சமையவ் பாத்திரங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 27 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் கூரைத் தகரங்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வு, மட்டக்களப்ப மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜா உட்பட பிரதேச செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது முதற்கட்டமாக 110 குடும்பங்களுக்கு தலா ஒரு குடும்பத்திற்கு 15 கூரைத் தகரங்களும் சமையல் பாத்திரங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • ahmed Tuesday, 28 August 2012 06:21 AM

    ஆஅஹ்ஹ்ஹ்ஹ் சின்ன புள்ள தனமா இல்ல ஹிஸ்புல்லா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .