2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஓடத்துறை இயந்திரப்படகு பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் சிரமம்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


மட்டக்களப்பு, மண்முனை, ஓடத்துறையில் சேவையிலீடுபடுத்தப்பட்டு வந்த இரண்டு இயந்திரப் படகுகளில் ஒன்று பழுதடைந்த நிலையில் கரையில் கட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பாதையினைப் பயன்படுத்திவரும் ஆயிரக்கணக்கான மக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போது ஒரு இயந்திரப்படகு மாத்திரம் சேவையிலீடுபடுத்தப்பட்டு வருவதனால் அதில் அதிகம் பேர் ஏறுவதனால் படகின் இருபக்கமும் உள்ள தட்டிகளில் நின்று ஆபத்தான நிலையில் பொதுமக்கள ஓடத்துறையைக் கடக்க வேண்டியுள்ளது.

இன்று காலைஇவ்வாறு படகின் தட்டியில் நின்று பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் சறுக்கி நடு ஆற்றில் விழப்பார்த்ததாக இப்பாதையில் இன்று காலை பயணித்தவர்கள் கூறினர்.

இது இவ்வாறு இருக்கையில் ஓடத்துறையினைக் கடப்பதற்கு பாலம் கட்டுவதற்கு உரிய ஆரம்பக்கட்ட வேலைத்தளங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வோடத்துறைக்குப் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நடுவதற்காக எதிர்வரும் 3ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகைதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .