2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

சவுக்கடி கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                       (ரி.லோஹித்)
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதி கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டது.

மட்டக்களப்பு பூம்புகாரைச் சேர்ந்த கே.எழில்ரூபன் என்ற தரம் 11இல் கல்விக் கற்கும் மாணவனின் சடலமென மாணவனின் பெற்றோர் அடையாளம் காட்டியுள்ளனர்.

மேற்படி மாணவன் தனது நண்பர்களுடன் கடந்த சனிக்கிழமை மாலை வீட்டிலிருந்து சென்றிருந்ததாக குறித்த மாணவனின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை  இம் மாணவனின்  சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .